Wednesday, September 5, 2012

ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது, சரோஜ் நாராயண சுவாமி - மறக்க முடியுமா?

கடந்த 20 வருஷத்துல, என்னெல்லாம் மாறி இருக்குன்னு பார்த்தா, அப்பப்பா!!! அப்படியே தலை சுத்துது. உலக அளவுல தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைஞ்சது மட்டும் இல்லாம, இப்போ  நம்ம ஊருல உலக சந்தைக்கு வந்த எல்லாமே உடனே கிடைக்குது. விதிவிலக்குனே பார்த்தா, இந்த ஐபோன், ஐபேட் மட்டும்தான். எப்படியும் நம்ம ஊருக்காரங்க வெளி நாட்டுல இருந்து பூட்டப்பட்ட(Locked) கைபேசி/அலைபேசி வாங்கிட்டு வந்துடுவாங்கன்னு தெரிஞ்சோ என்னமோ, இந்த ஆப்பிள் நிறுவனம் ஒரு ஆறு மாசம் கழிச்சுத்தான் நாம ஊருல வெளியிடறாங்க.

1980 களின் கடைசி வரைக்கும் வானொலி தான் பிரதானம். ஏதோ ஊருக்கு ஒன்னு ரெண்டுன்னு சில வீடுகளில கருப்பு வெள்ளை தொலைக்காட்சி இருக்கும். அந்த கருப்பு வெள்ளை தொலைகாட்சியில கூட, திரைக்கு முன்னாடி ஒரு கதவு மாதிரி ஒன்னு இருக்கும். தொலைகாட்சிய அணைச்சதுக்கு அப்புறம், அதை வேற மூடனும். நம்ம கவாஸ்கர் வந்து Solidaire தொலைக்கட்சிக்கு விளம்பரம் செய்வார் பாருங்க... அப்படியே வாய பொளந்துட்டு பார்ப்போம்.

எங்க வீட்டுல ஒரு Murphy வானொலி பெட்டி இருந்தது. வானொலியில "ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது, சரோஜ் நாராயண சுவாமி" என்ற கணீர் குரலை யாரவது மறக்க முடியுமா?

பக்கத்து வீட்டுக்கு போயி மணி கணக்குல உக்காந்து தொலைக்காட்சி பார்த்தவங்க, நம்மில்ல 90 % இருப்போம். அதிலே ஒளிபரப்பான மகாபாரதம், அப்புறமா காத்தாடி ராமமூர்த்தியோட நாடகம் எல்லாம் இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு. வண்ணத்திரை தொலைகாட்சி இருந்துட்டா, ஒரே கொண்டாட்டம் தான்.

நான் 1991 11ம் வகுப்புல சேர்ந்த போதுதான் கணிப்பொறியே பார்த்தேன்.  அப்பகூட, வெறும் DOS ஆபரேடிங் சிஸ்டமும், பேசிக் ப்ரோக்ராம்மிங்கும், கருப்பு வெள்ளை திரைதான். அப்புறமா கல்லூரி வந்ததுக்கு அப்புறமா தான் வண்ணத்திரையுடைய கணிப்பொறி.  

அந்த கால கட்டத்துல எல்லாம் சொந்தத்துல யாரவது பெரியவங்க மண்டைய போட்டுட்டா, ஒருத்தர் பேருந்தில் ஏறி வந்து சொல்லுவாரு. கொஞ்சம் வசதி இருந்தா, அப்படியே மகிழுந்து (Car) எடுத்திட்டு வந்து கையோட கூட்டிட்டு போயிடுவாங்க. தொலைபேசி கூட இல்லாம எத்தனையோ ஊருங்க இருந்து இருக்கு.  அஞ்சலகத்துல மட்டும் தான் தொலைபேசி இருக்கும். அதுவும், ஒரு 10  கிலோ எடையுடன் கூடியதாக இருக்கும். தொலைதூர தகவல் பரிமாற்றம் அப்படின்னா தபால், தந்தி தான்.

அப்புறமா, 1996, 97 வருஷத்துல பேஜர் அப்படின்னு சொல்லகூடிய ஒரு கருவி வந்தது. அப்போ கைபேசி மிக சில பேருகிட்ட மட்டும்தான் இருக்கும். உள்வரும் அலைப்புகளுக்கே (incoming  calls ) ஒரு நிமிடத்துக்கு கிட்ட தட்ட 18  ரூபாய்னு நினைக்கிறேன். சில வருடங்களில, உள்வரும் அழைப்புக்கான பணம் குறைஞ்சு நிமிடத்துக்கு  2  ரூபாய் அளவுக்கு வந்தது. 2003க்கு மேல, அது இலவசம் ஆயிடுச்சு.

ரிலையன்ஸ் எல்லாருக்கும் குறைஞ்ச விலையில கைபேசி கொடுத்து இந்தியாவில ஒரு பெரிய புரட்சி பண்ணினாங்க. அந்த ரிலையன்ஸ் அலைபேசிய வாங்கின பலர் மாசகணக்கா அதுக்கு பணம் கட்டலைங்கறது வேற விஷயம். அதுக்கப்புறம் தான் ஒவ்வொருத்தர் கையிலேயும் ரெண்டு, மூடு, வீட்டுக்கு ஆறு, ஏழுன்னு கைபேசி வலம் வர ஆரம்பிச்சுது.

இதுக்கிடையில, உலகமயமாதம் மற்றும் கணிப்பொறி படிப்பு இப்படிப்பட்ட பல விஷயங்களால, நம்ம ஆளுங்க நிறைய பேர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போக முடிஞ்சது. அங்கே இருக்குற புதுசு புதுசான பல உபகரனங்கள நம்ம நாட்டுல பார்க்க முடிஞ்சுது. வெளிநாட்டு நிறுவனங்களும் நான், நீனு போட்டி போட்டுட்டு வந்து நம்ம ஊருல கடை போடா ஆரம்பிச்சாங்க. சீப்பு சோப்புல இருந்து, ஆகாய விமானம் வரைக்கும் எல்லாமே வெளிநாட்டு சரக்கு ஆயிடுச்சு.

அப்புறமா இந்த இணையம், மின்னஞ்சல் இந்த இரண்டுமே ஒரு புது வகையான தாக்கத்த உண்டு பண்ணுச்சு. அதுகூட இணையம் வாயிலான அரட்டை (Chat) சில வருஷங்களுக்கு முன்னாடி ரொம்ப பிரபலம். நம்ம ஆளு தினமும் குளிக்கிறானோ இல்லியோ, ஒரு உலாவல் மையம் (Browsing  Center) போயி மணிக்கணக்குல இந்த அரட்டையில ஒரு பெண் பெயருல லிட்டர் கணக்குல ஜொள்ளு ஊத்திட்டு இருப்பான். காதலர் தினம் படத்துல நம்ம கவுண்டரு இந்த அரட்டையில கலக்கி இருப்பாரு.

அப்புறமா கொஞ்ச நாளுக்கு அப்புறம், கூகுள், முகநூல், வலைப்பதிவு அப்படின்னு நாம எங்கேயோ போயிட்டோம். இப்போ தினமும் ஒரு முறையாவது கூகுள் பக்கத்த திறக்காத ஆள் யாரவது இருந்தா, அவங்களுக்கு கோயிலே கட்டலாம்.

இதெல்லாம் பாக்குறப்போ, நம்ம தலைமுறை (அதாவது இப்போ ஒரு 30  வயசுல இருந்து 45  வயசு இருக்கறவங்க) இந்த மாற்றத்த கண்கூட பார்த்து இருப்போம். எவ்வளவு மாற்றங்கள்... எத்தனை அறிய கண்டுபிடிப்புக்கள்!!! மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் அப்படிங்கறது எவ்வளவு சரியா இருக்கு!!!

அடுத்த தலைமுறை, இதைவிட இன்னும் நிறைய கண்டு பிடிப்பாங்க, அதிலே எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆனால், இவ்வளவு நல்ல விஷயங்கள் கண்டுபிடித்த அதே காலகட்டத்துல, எவ்வளவோ தீய விஷயங்களும் கண்டு பிடிச்சுட்டே இருக்கோம். ஆந்தராக்ஸ், அணு குண்டு இன்னும் எவ்வளவோ.

அதுமட்டும் இல்லாம, இயற்க்கை வளங்களை எல்லாம் அழிச்சுட்டு வந்து இருக்கோம். ஒரு பக்கம் பார்த்தா மழை இல்லை, இன்னொரு பக்கம் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்.  இதுக்கு இடையில, உலக வெப்பமயமாதல், கடல் மட்டம் உயருதல் அப்படின்னு பல வகையான ஆபத்துக்கள்.

மூன்றாம் உலகப்போர் வருவது தண்ணீர் மற்றும் உணவுக்காகத்தான் இருக்க முடியும். ஆனால், அதுக்கும் கூடிய விரைவில் ஒரு மருந்து கண்டுபிடிச்சுடுவாங்க. ஒரு நாளைக்கு 2 மாத்திரை சாப்பிட்டா, பல நாள் உணவு தண்ணீர் இல்லாம இருக்கலாம்னு.

ஏதோ... நாம இருக்குற காலம் வரைக்கும், மூணு வேலை மூக்கு பிடிக்க சாப்பிட முடியும்னு நினைக்கிறேன். அதுக்கும் பங்கம் வந்துடாம இருந்தா சரிதான்.
தொடர்புடைய பதிவுகள் :


16 comments:

 1. அந்தக்கால ஞாபகம் வந்தது...

  ஒளியும் ஒலியும் மறந்து விட்டீர்களே...

  இப்போதே பல பேருக்கு மாத்திரை தான் உணவே... (ச.முன் / ச.பின்) முடிவில் சொன்னது போல் நடக்காமல் இருந்தால் சரி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார். ஒளியும் ஒளியும் மட்டுமல்ல, எதிரொலினு ஒரு நிகழ்ச்சியில, முந்தின நிகழ்ச்சி பத்தி கடிதங்களை படிப்பாங்க பாருங்க, சிரிப்பா இருக்கும். அப்புறம் விவசாயிகளுக்கு வயலும் வாழ்வும்னு ஒரு நிகழ்ச்சி வரும். இதெல்லாம் மறக்க முடியுமா?

   Delete
 2. பசுமையான நினைவுகள்! அருமை!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 3. நன்றாக நினைவு படுத்தி எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள், நன்றி!

  ***

  சித்ரஹார், ஒளியும் ஒலியும், செவ்வாய் கிழமை ஒரு மணி நேர நாடகங்கள், ராமாயணம், மகாபாரதம், ஞாயிறு மாலை திரைப்படம், சில நாட்களில் மதியம் திரைப்படம்.. ஆஹா எவ்வுளவு விஷயங்கள் ரசித்து செய்திருக்கிறோம்!! :))

  ***

  வானொலி செய்திகள் unbiased ஆக - ஒரு பக்க சார்பில்லாமல் அருமையாக இருக்கும்.. இரவு 9 மணிக்கு வண்ணத்திரை என்று புதிய பாடல்கள் கேட்ட ஞாபகம்!! :)

  ReplyDelete
 4. நன்றாக நினைவு படுத்தி எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள், நன்றி!

  ***

  சித்ரஹார், ஒளியும் ஒலியும், செவ்வாய் கிழமை ஒரு மணி நேர நாடகங்கள், ராமாயணம், மகாபாரதம், ஞாயிறு மாலை திரைப்படம், சில நாட்களில் மதியம் திரைப்படம்.. ஆஹா எவ்வுளவு விஷயங்கள் ரசித்து செய்திருக்கிறோம்!! :))

  ***

  வானொலி செய்திகள் unbiased ஆக - ஒரு பக்க சார்பில்லாமல் அருமையாக இருக்கும்.. இரவு 9 மணிக்கு வண்ணத்திரை என்று புதிய பாடல்கள் கேட்ட ஞாபகம்!! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி பழூர் கார்த்தி. இன்னும் நிறைய எழுத நினைத்தேன். பெரிய பதிவு ஆகிவும் என்று விட்டு விட்டேன். பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் நினவு கூர்ந்ததற்கு நன்றி.

   Delete
 5. என் பதிவுகளுக்கு வந்திருந்தீர்கள்... என் தளத்தில் நீங்கள் தொடர்ந்து எப்போதும் இணைந்து கருத்துகளைப் பதித்து செல்ல வேண்டும் என வேண்டுகிறேன்... ஆகாசவாணி பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. புதிதாய் அறிந்தேன் நன்றி... எனது தளத்தில்..
  http://varikudhirai.blogspot.com/2012/09/the-pianist-film-review-in-tamil.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருண். உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருகிறேன்.

   Delete
 6. மர்பி வானொலி பெட்டி , மெல்வின் டிமெல்லோ ஒம்பது மணி நீயூஸ், விவித் பாரதிபாடல்கள், சினிமா முழு நீள திரை படங்கள், ( பாசமலர்), துபாக்ஷ் வீடு என்கிற நாடகம் ,இன்னும் பல நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

  வாழ்க்கை சிம்பிளாக இருந்த காலம். எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை ஒளிர்ந்த காலம்!

  பெற்காலம்- ஒரு விதத்தில்.

  நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பட்டுராஜ். நான் மறந்த நிறைய விஷயங்களை நீகள் நினைவு படுத்தி விட்டீர்கள்.

   \\வாழ்க்கை சிம்பிளாக இருந்த காலம். எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை ஒளிர்ந்த காலம்!\\

   சரியாக சொன்னீர்கள். இன்றைய ஓட்டபந்தய வாழ்க்கை இல்லாமல், வாழ்க்கை, மிகவும் அழகாகவும், எளிதாகவும் இருந்த காலம் அது.

   Delete
 7. மலரும் நினைவுகள். ரேடியோ கேட்டு தான் நேரமே சரி செஞ்சுக்கிட்டோம். முதன் முதல்ல BPL கம்பெனி-செங்கல் சைஸ் மொபைல் போன்னு காமெடியா சொல்லுவாங்க. வானொலி கேட்பது குறைஞ்சி போச்சு,அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் சரியா சொன்னீங்க. "மூனு வேளை சாப்பாடு" மறந்திட வேண்டியதுதான்.

  ReplyDelete
 8. மலரும் நினைவுகள். ரேடியோ கேட்டு தான் நேரமே சரி செஞ்சுக்கிட்டோம். முதன்
  முதல்ல BPL கம்பெனி-செங்கல் சைஸ் மொபைல் போன்னு காமெடியா சொல்லுவாங்க. வானொலி
  கேட்பது குறைஞ்சி போச்சு,அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் சரியா
  சொன்னீங்க. "மூனு வேளை சாப்பாடு" மறந்திட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கலாகுமரன்.

   Delete
 9. அருமையான தொகுப்பு. கவாஸ்கர், கருப்பு வெள்ளை தொலைகாட்சி, சரோஜ் நாராயண சுவாமி என எங்களை எல்லாம் இருபது முப்பது ஆண்டுகள் பின்னோக்கி நினைத்துப் பார்க்க வைத்து விட்டீர்கள்.

  // ஏதோ... நாம இருக்குற காலம் வரைக்கும், மூணு வேலை மூக்கு பிடிக்க சாப்பிடமுடியும்னு நினைக்கிறேன். அதுக்கும் பங்கம் வந்துடாம இருந்தா சரிதான்.//

  அப்பா உங்கள் கவலையெல்லாம் இதுதானா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி மனிதன். மூணு வேலை சாப்பிடறதை பத்தி எழுத காரணம், அதுக்குத்தான் இனிமே ஆப்பு வரப்போகுதே!!!

   Delete