Tuesday, July 31, 2012

ஜெயலலிதா: தமிழகத்தை தலை நிமிர வைக்கும் புதிய சக்தியா???

ஜெயலலிதா: தமிழகத்தை தலை நிமிர வைக்கும் புதிய சக்தியா???



இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் நான் ஒரு .தி.மு. அனுதாபியோ அல்லது அம்மையார் ஜெயலலிதாவின் துதி பாடியோ இல்லை. நம் நாடு முன்னேறி ஒரு வல்லரசு (அண்ணன் விஜயகாந்த் படம் இல்லிங்க) ஆகப்போவது எப்போது என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கும் பல கோடி இந்தியர்களில் நானும் ஒருவன். கடந்த சில மாதங்களாக சிங்கையில் இருப்பதால், சிங்கப்பூர் பற்றி சிறிது அறிந்து, இங்கே சிங்கையில் உள்ள அரசியல், அரசியல்வாதிகள், அவர்களது மக்கள் நல திட்டங்கள் பற்றி ஆச்சர்யபட்டு, இப்படி நம் நாடு இல்லையே என்று ஆதங்கப்படும் ஒரு சராசரி இந்திய தமிழன்.

விவசாயத்தை பற்றி எழுதலாம் என்று எண்ணியிருந்த எனக்கு, இன்றைய முக்கிய செய்தியாக, "ஜெ.. டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?-மது விலக்கு அமலாகிறது??" என்ற செய்தி, இந்த பதிவை எழுத தூண்டியது.

என்னை பொறுத்தவரை, இது மிகவும் முக்கிய செய்தி மட்டும் அல்ல. தமிழக மற்றும் இந்திய அரசியல் மற்றும் (குடி)மக்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அப்படி என்ன திருப்புமுனை என்று கேட்க தோன்றுகிறதா?
     
1. ஜெயலலிதா மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு
2. “கிங் மேக்கர்” என்று சொல்ல கூடிய, பிரதமரையே தேர்ந்து எடுக்கும் சக்தியாக உருவெடுக்கலாம்
3. தமிழக தாய்மார்களின் ஏகோபித்த பேராதரவு பெற வாய்ப்பு, அது அவரை "இருக்கும்" வரை முதல்வராக இருக்க அடித்தளம் அமைக்கலாம்
4. தமிழக மக்களின் வாழ்வுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையலாம்
5. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல தீய செயல்கள் குறைய வாய்ப்பு
6. உழைப்பாளர்கள் பணம் ஒழுங்காக வீட்டிற்கு செல்ல ஒரு முயற்சி
7. ஏழ்மை, வறுமை குறைய ஒரு சந்தர்ப்பம் அமையலாம்
8. விவசாயத்தில் மறுமலர்ச்சி உருவாக்கலாம்

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனா, இடம் பத்தாது.

மொத்தத்தில், தமிழ் நாடு, குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஒரு நல்ல பாதையை நோக்கி போகும் என்பது என் எண்ணம்.

குஜராத் பற்றி பேசுவதால், நான் பா.ஜ.க விசுவாசி இல்லை. நரேந்திர மோடி அவர்கள் செய்த ஒரு தவறால், அவருக்கு இன்றும் அமெரிக்க விசா மறுக்கப்பட்டு வருவது எவ்வளவு பெரிய அவமானம் என்று அறிந்தவன்.

என்னுடைய நோக்கம், நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் யாரவது எப்போதாவது ஒரு சில நல்ல முடிவுகள் எடுக்கும்போது, அதைப்பற்றி எழுதி எனக்கு நானே சந்தோஷப்பட்டு கொள்வது.

ஜெயலலிதா அவர்கள் மிகச்சிறந்த நிர்வாகி என்பது எல்லாரும் அறிந்ததே. அறிவாளி முட்டாள் ஆவதற்கு ஒரு காரணம் போதும். அது "ஆணவம்". அதை தெரிந்து கொண்டு, அம்மையார் இது போன்ற முடிவுகள் எடுத்தால், நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

இந்த முடிவை, ஜெ. அவர்கள் அமல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன், இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: போன பதிவுல, செங்கோட்டையன் அவர்களை, அம்மா பதவியில் இருந்து தூக்கியதை கண்டித்து பதிவு எழுதியவன். இப்போ, அம்மாவை பத்தி பாராட்டுறதுக்கு காரணம், நல்லது செஞ்சா நடுநிலை மக்கள் கண்டிப்பா ஆதரிப்பாங்க. எனவே... அரசியல்வாதிகளே, கொஞ்சம் பொது நலனையும் பாருங்க.

Wednesday, July 18, 2012

அம்மா அதிரடி!!! செங்கோட்டையனுக்கு ஆப்பு!!! அடுத்தது யாரு?

அம்மா அதிரடி!!! செங்கோட்டையனுக்கு ஆப்பு!!! அடுத்தது யாரு?

தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடமிருந்து பதவிபறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக பெருந்துரை எம்.எல்.., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முறை .தி.மு.., ஆட்சியில் முதலில் அவருக்கு வேளாண்மைத்துறை வழங்கப்பட்டது.
பின்னர் அநத பதவி மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அந்த பதவியும் பறிக்கப்பட்டு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாலை செங்கோட்டையன் வகித்த தலைமை நிலையச்செயலாளர் பதவிபறிக்கப்பட்டது.
அந்த பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதன் பின்னர் அவரிடமிருந்து வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

இது, இன்னிக்கு செய்தி தாள்ல படிச்ச செய்தி.

ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஒரு அமைச்சருக்கு நேர்ந்திருக்கும் கதியே இதுவென்றால், மக்களான நாம் எம்மாத்திரம். ஒரு கோடி நிகழ்ச்சியில், நம்ம சூர்யா சொன்ன மாதிரி "மாற்றம் ஒன்றே மாறாதது" அப்படின்னு நினச்சிட்டு போயிடலாம். ஆனால், ஒரு சாதாரண மனிதனா இருந்து பார்கறப்போ, ஒரு அமைச்சர இத்தனை முறை துறை மாதினதுனால நம்ம நாட்டுக்கு எவ்வளவு இழப்புன்னு யோசிக்க தோணுது.

இப்போ, ஒரு சாதாரண தனியார் அலுவலகத்தை எடுத்துக்குவோம். கொஞ்சம் சுலபமா இருக்க, தொழில்நுட்ப வேலை பார்கர (அதாங்க, நம்ம IT  வேலை) நடு நிலை ஊழியன உதரணத்துக்கு எடுத்துக்கலாம்.

அவரோட அலுவலகத்துல, ஒரு ப்ராஜெக்ட்- இருந்து இன்னொரு ப்ராஜெக்ட் மாறினாலே, 3  மாசத்துக்கு தலை கால் புரியாது. புது டீம் லீட், புது சக தொழிலாளி, புது திட்ட மேலாளர் (ப்ராஜெக்ட் மேனேஜர்), புது வாடிக்கயாளர் (Client ) அப்படின்னு, எல்லாமே கண்ண கட்டி காட்டுல உட்ட மாதிரி இருக்கும். இதுக்கும், அவருக்கு அது பத்தின அவர் சார்ந்த துறை அடிப்படை அறிவு நிறையவே இருக்கும்.

இப்போ, நம்ம அமைச்சர் செங்கோட்டயன எடுத்துக்கலாம். ஒரு வருஷத்துல அவரு மாறின துறைகள்,  வேளாண்மைத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வருவாய்த்துறை மற்றும் தலைமை நிலையச்செயலாளர் பதவி.
அடிபடையில, அவரு ஒரு விவசாயி, அப்புறம் ஒரு அனுபவம் மிக்க அமைச்சர். எனவே, அவருக்கு, இந்த மாற்றம் கொஞ்சம் சுலபமாகவே இருந்திருக்கும். அனால், அந்த அந்த துறை அதிகாரிங்களையும், நம்மள மாதிரி மக்களையும் கொஞ்சம் நினச்சு பாருங்க?
போன ஆட்சியில, கலெக்டர் சகாயம் மாதிரி நல்ல அதிகாரிங்கள எல்லாம், அமைச்சர்கள் அவங்க சம்பாரிக்க முடியாதது, மற்றும் அகங்காரம் காரணமாக டம்மி போஸ்டுக்கு தூக்கி அடிச்சாங்க. அது, இந்த ஆட்சிலயும் நடக்குது. அதுக்கு மேலே, அமைச்சர்களையே, மாசம் ஒரு துறைக்கு தூக்கி அடிக்கறதும் நடக்குது.

ஒரு வருடத்தில் இப்படி பல துறை மாற்றுவதால், எவ்வளவு நஷ்டம்? எவ்வளவு உற்பத்தி இழப்பு? இருக்குற அமைச்சர் எல்லாம், நமக்கு எப்போ ஆப்புன்னு நடுங்கிகிட்டிள்ள இருப்பாங்க? எப்படி அவங்களால துணிஞ்சு ஒரு முடிவு எடுக்க முடியும்?

இது நம்ம மாதிரி சாதாரண மக்களுக்கு எதாவது நன்மைய கொடுக்குமா? இது, நம்ம நாட்டோட தலை விதி. மாற்ற யாரால் முடியும்?