அம்மா அதிரடி!!! செங்கோட்டையனுக்கு ஆப்பு!!! அடுத்தது யாரு?
தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடமிருந்து பதவிபறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக பெருந்துரை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முறை அ.தி.மு.க., ஆட்சியில் முதலில் அவருக்கு வேளாண்மைத்துறை வழங்கப்பட்டது.
பின்னர் அநத பதவி மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அந்த பதவியும் பறிக்கப்பட்டு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாலை செங்கோட்டையன் வகித்த தலைமை நிலையச்செயலாளர் பதவிபறிக்கப்பட்டது.
அந்த பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதன் பின்னர் அவரிடமிருந்து வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இது, இன்னிக்கு செய்தி தாள்ல படிச்ச செய்தி.
ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஒரு அமைச்சருக்கு நேர்ந்திருக்கும் கதியே இதுவென்றால், மக்களான நாம் எம்மாத்திரம். ஒரு கோடி நிகழ்ச்சியில், நம்ம சூர்யா சொன்ன மாதிரி "மாற்றம் ஒன்றே மாறாதது" அப்படின்னு நினச்சிட்டு போயிடலாம். ஆனால், ஒரு சாதாரண மனிதனா இருந்து பார்கறப்போ, ஒரு அமைச்சர இத்தனை முறை துறை மாதினதுனால நம்ம நாட்டுக்கு எவ்வளவு இழப்புன்னு யோசிக்க தோணுது.
இப்போ, ஒரு சாதாரண தனியார் அலுவலகத்தை எடுத்துக்குவோம். கொஞ்சம் சுலபமா இருக்க, தொழில்நுட்ப வேலை பார்கர (அதாங்க, நம்ம IT வேலை) நடு நிலை ஊழியன உதரணத்துக்கு எடுத்துக்கலாம்.
அவரோட அலுவலகத்துல, ஒரு ப்ராஜெக்ட்-ல இருந்து இன்னொரு ப்ராஜெக்ட் மாறினாலே, 3 மாசத்துக்கு தலை கால் புரியாது. புது டீம் லீட், புது சக தொழிலாளி, புது திட்ட மேலாளர் (ப்ராஜெக்ட் மேனேஜர்), புது வாடிக்கயாளர் (Client ) அப்படின்னு, எல்லாமே கண்ண கட்டி காட்டுல உட்ட மாதிரி இருக்கும். இதுக்கும், அவருக்கு அது பத்தின அவர் சார்ந்த துறை அடிப்படை அறிவு நிறையவே இருக்கும்.
இப்போ, நம்ம அமைச்சர் செங்கோட்டயன எடுத்துக்கலாம். ஒரு வருஷத்துல அவரு மாறின துறைகள், வேளாண்மைத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வருவாய்த்துறை மற்றும் தலைமை நிலையச்செயலாளர் பதவி.
அடிபடையில, அவரு ஒரு விவசாயி, அப்புறம் ஒரு அனுபவம் மிக்க அமைச்சர். எனவே, அவருக்கு, இந்த மாற்றம் கொஞ்சம் சுலபமாகவே இருந்திருக்கும். அனால், அந்த அந்த துறை அதிகாரிங்களையும், நம்மள மாதிரி மக்களையும் கொஞ்சம் நினச்சு பாருங்க?
போன ஆட்சியில, கலெக்டர் சகாயம் மாதிரி நல்ல அதிகாரிங்கள எல்லாம், அமைச்சர்கள் அவங்க சம்பாரிக்க முடியாதது, மற்றும் அகங்காரம் காரணமாக டம்மி போஸ்டுக்கு தூக்கி அடிச்சாங்க. அது, இந்த ஆட்சிலயும் நடக்குது. அதுக்கு மேலே, அமைச்சர்களையே, மாசம் ஒரு துறைக்கு தூக்கி அடிக்கறதும் நடக்குது.
ஒரு வருடத்தில் இப்படி பல துறை மாற்றுவதால், எவ்வளவு நஷ்டம்? எவ்வளவு உற்பத்தி இழப்பு? இருக்குற அமைச்சர் எல்லாம், நமக்கு எப்போ ஆப்புன்னு நடுங்கிகிட்டிள்ள இருப்பாங்க? எப்படி அவங்களால துணிஞ்சு ஒரு முடிவு எடுக்க முடியும்?
இது நம்ம மாதிரி சாதாரண மக்களுக்கு எதாவது நன்மைய கொடுக்குமா? இது, நம்ம நாட்டோட தலை விதி. மாற்ற யாரால் முடியும்?
அருமையான பகிர்வு.
ReplyDeleteவலைச்சரம் மூலம் தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார். வலை தலத்திக்கு வந்து உங்கள் கருது தெரிவித்தத்திற்கு மிக்க நன்றி. உங்கள் வலை தளத்திற்கு நிச்சயம் வருகிறேன். வலைச்சரம் பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே
இது ஒரு கலவை
- சென்று பார்க்கவும். நன்றி !
நேரம் கிடைச்சா என் தளம் வாங்க... நன்றி.
திண்டுக்கல் தனபாலன்
வலைச்சரம் சென்று நன்றி தெரிவித்து விட்டு வந்துள்ளேன் சார்
Delete