Tuesday, July 10, 2012

குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு சரி செய்ய ஒரு வாய்ப்பு

குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு - சரி செய்யஒரு வாய்ப்பு:இந்தகணிப்பொறி யுகத்தில், எவ்வளவோ புதுவகயானநோய்கள் வந்தாலும், குழந்தைகளை மிகவும் பாதிப்பது கண் பிரச்சனை தான்.

நாம் குழந்தையாக இருந்தபோது, பள்ளியில் 1 % பேர் கண்ணாடி அணிவார்கள். ஆனால், இப்போது தோரயமாக, 10 % அல்லது அதற்கு மேல் கண்ணாடி அணிகிறார்கள்.

இதற்க்கு எத்தனயோ காரணங்கள் இருந்தபோதிலும், என்னை பொருத்தவரை சில மிகமுக்கியமானகாரணங்கள் கணிபொறி, வீடியோ கேம், கைபேசி வகையிலானவிளையாட்டு,  நீண்டநேரம் கண் இமைக்காமல் தொ(ல்)லை காட்சியில் கார்டூன் பார்ப்பது, சத்தான உணவு வகைகளை (கீரை மற்றும் காய் கறிகள்) சாப்பிடாதது, பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுக்கு அடிமை ஆவது போன்றவை.

என்னுடைய மகன் முதல், நண்பர்களின் குழந்தைகள் பலரும் சிறு வயதிலேயே கண்ணாடி போட்டுள்ளார்கள். எத்தனையோ பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு இந்த சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு என்று தெரிந்தவுடன் கதறி அழுது இருக்கிறார்கள்.

நான், கடந்த முறை சிங்கப்பூர் வந்த போது, என்னுடன் வேலை பார்ப்பவர் Pinhole Glass என்ற ஒரு கண்ணாடி வாங்கினார். இது பிளாஸ்டிக்கினால் ஆனா கண்ணாடி போன்ற ஒரு சிறப்பு மருத்துவ உபகரணம். Dr வில்லியம் பேட்ஸ் (William Bates ) என்ற ஒரு அமெரிக்க மருத்துவரால் இது உருவாக்க பட்டது. இதற்கு, பேட்ஸ் தொழில் நுட்பம் (Bates Technique)  என்று பெயர்.

முழுக்க சிறு துளைகளை கொண்ட இந்த கண்ணாடியை, படிக்கும் போதோ அல்லது தொலைகாட்சி பார்க்கும் போதோ அணிந்து கொள்ள வேண்டும். அப்படி தொடர்ந்து செய்தால், கிட்ட பார்வை (Short Sight ) பார்வை கோளாறு சரி ஆகும் என்று சொன்னார்கள்.

சரி... பெரிய விலை இல்லை (தோராயமாக, 50 சிங்கப்பூர் டாலர் என்று நினைக்கிறேன்), நாமும் ஒன்னு வாங்கலாமே என்று வாங்கினேன். காரணம், நானும் எனது மனைவியும் கண்ணாடி அணிபவர்கள். வாங்கி வந்து இரண்டொரு நாள் அணிந்தோம். அப்புறம் அது மறந்தே விட்டது. இந்த வருடம், சிங்கப்பூர் வந்த போது, அந்த கண்ணாடியையும் எடுத்து கொண்டு வந்தோம். அதை அணிந்து பார்த்தல், கிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்கள், கொஞ்சம் தெளிவாக பார்க்க முடியும். இதை நானே, எனது அனுபவத்தில் பார்த்தது. கீழே உள்ள படத்தில் உள்ளதுதான் பேட்ஸ் கண்ணாடி.நேற்று, எனது நண்பர் கூப்பிட்டு, பாண்டிச்சேரி- ஒரு மருத்துவமனை இருக்கு. அங்கே, கண் பார்வை குறைபாட்டை சில கண் பயிற்சிகளை கொண்டு (யோகா மாதிரி) சரி செய்கிறார்கள். கொஞ்சம் இன்டர்நெட் பார்த்து சொல்லுன்னார்.
இன்னிக்கு, கூகுள் ஆண்டவர் உதவியோட அதை தேடினேன். ஆண்டவர் கை விடல. நிறைய தகவல்கள் குடுத்தார். அப்போதான் இந்த பதிவு எழுதும் யோசனை வந்தது. உடனே, ஆட்டத்துல இறங்கிட்டேன்.
இந்த மருத்துவமனை, பாண்டிச்சேரி அர்விந்த் ஆசிரம கட்டுபாட்டுக்கு உட்பட்டது. Dr அகர்வால் அவர்களால் உருவாக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் கட்டணம் எதுவும் வாங்குவது இல்லை. நாமாக பார்த்து கொடுத்தல் கொடுக்கலாம். இவர்கள், பேட்ஸ் முறையில் தான் இந்த கண் பயிற்சிகளை கற்று கொடுக்கிறார்கள். அத்துடன், Dr. அகர்வால் அவர்கள், தனது ஆராய்ச்சியில் கண்டு பிடித்த சில தொழில்நுட்பத்தையும் பயன் படுத்துகிறார்கள்.

இங்கு 7 வயது முதல் 40 வயது வரை உள்ள எவரும் செல்லலாம். 7 நாட்கள் அங்கேயே தங்கி (ஒரு நாளைக்கு 2 முறை பயிற்சி) சிகிச்சை எடுத்து வர வேண்டும். அரவிந்தர் ஆசிரமத்திலேயே தங்க வசதி உள்ளது. அங்கே போவதற்கு முன்பு, நீங்கள் முன்பதிவு செய்யவேண்டும்.
மின்னஞ்சல்: auroeyesight@yahoo.com
தொலை பேசி: +91 413 2233659
எனது நண்பர் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கே செல்ல இருக்கிறார். அங்கே சென்று வந்த பிறகு, மேலும் தகவல்கள் கொடுக்கிறேன். இது பற்றிய செய்தியை காண, கீழே கொடுத்துள்ள லிங்க்- அமுக்கவும்.


மற்றும், இதனால் பயனடைந்த ஒருவரின் ஆங்கில வலைத்தளம் கீழே உள்ளது. இதுவும், உங்களுக்கு பயனளிக்கலாம்.


கண் குறைபாடு உள்ள அனைவருக்கும் (முக்கியமாக, கண் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு) ஒரு நல்ல தகவலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை முடிக்கிறேன்.

நன்றி!!!
தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment