Tuesday, June 12, 2012

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

வணக்கம் வலையுலக / பதிவுலக நண்பர்களே!!! கடந்த பல வருடங்களாக பதிவுலகத்தில் உலவிக்கொண்டு இருந்தாலும், சொந்தமாக ஒரு வலை பதிவை உருவாக்கி எழுத வேண்டும் என்ற ஆசை ஒரு கனவாகவே இருந்தது.

இன்று என்னமோ தெரியவில்லை. கலகலப்பு என்ற ஒரு தலைப்பு மனதிற்கு பிடித்தது. காரணம், இந்த வலைப்பதிவை முடிந்த வரை கலகலப்பாக இருக்குமாறு எழுத வேண்டும் என்ற ஒரு ஆவல். எனவே பிள்ளையார் சுழி போட்டு, ஒரு ஆரம்ப பள்ளி மாணவனாக இன்று இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.

பதிவுலக பேராசிரியர்களும், சக நண்பர்களும் தங்களது ஆதரவை வழங்கி, இந்த மாணவனுக்கு குறைகளை சுட்டி காட்டி அறிவுரைகள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு.

எதை பற்றி எழுதுவது? எப்படி எழுதுவது? இப்போதைக்கு எதுவும் தோணவில்லை. ஆனால், எழுதவேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைய உண்டு.

பதிவுலகம் ஒரு முடிவில்லா கடல் என்பது தெரியும். எவ்வளவோ திமிங்கலங்களும் சுறாக்களும் இங்கே நீச்சல் போட்டுகொண்டு இருப்பதும் தெரியும். இருந்தாலும், ஒரு சிறிய மீனாக, நானும் இதில் எனது பங்கை அளிக்க இஇருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்னைப்பற்றி:

தமிழ் நாட்டில் பிறந்து, பெங்களூர் நகரத்தில் 15 வருடங்கள் வேலை செய்து, இப்போது சிங்கப்பூர் நகரத்திலே மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் ஒரு இளைஞன் (மனதளவில் இன்னும் இளைஞன் தான்). மிக விரைவில், சிங்கை பதிவர்கள் வட்டத்திலே இடம் பிடிப்பது இப்போதைய இலக்கு.

இப்போதைக்கு அரைபுள்ளி வைத்து இந்த முதல் பதிவை முடிக்கிறேன். அரைபுள்ளி வைப்பது, அடுத்த பதிவிற்கு அடித்தளம் போடுவதற்காக.

வணக்கம்.
தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment