Monday, September 24, 2012

பக்கத்து மாநிலத்தின் அதிமேதாவி அங்குராசுகள்

கர்நாடகா மாநிலத்துல இருக்குற வேலை வெட்டி இல்லாத சோம்பேறி, ரவுடி, தெருப்பொறுக்கி போன்ற அதிபுத்திசாலிங்களுக்குன்னு சில கட்சிகள் இருக்கு. அதுக்கும் தலைவர்கள் இருக்காங்க.  இவங்களோட வேலையே, அடுத்த ஊருக்காரங்க யாராவது கர்நாடகா (குறிப்பா பெங்களூரு) வந்து நல்லா சம்பாரிக்கறது தெரிஞ்சா இந்த அதிபுத்திசாலிங்களுக்கு வயிறு எரியும். எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்திட்டு இருப்பாங்க.

நல்ல செழிப்பான ஆத்து பிரதேசத்துல எவ்வளவோ பணப்பயிர் செஞ்சு சம்பாரிக்கவேண்டிய இடத்துல, ராகி பயிறு பண்ணற அளவுக்கு அறிவாளிங்கன்னா பாத்துகோங்க.

முன்னாடி 1991 காவேரி தண்ணி பிரச்சன வந்தப்போ, மைசூர், மாண்டியா, ஹாசன் பக்கம் தமில்காரங்க தோட்டம், வீடு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கினாங்க. அதுக்கு முக்கியமான காரணம் தமிழ் நாட்டுக்கு தண்ணி கேக்கறாங்கன்னு இல்ல, தமிழ்காரன் ஊரு விட்டு ஊரு வந்து நல்ல பொழைக்கரானேன்னு பொறாமை, பொச்செரிச்சல்தான்.

தமிழ் நாடு பஸ்சு, லாரின்னு ஒன்னையும் விட்டு வக்கல. அதேமாதிரி, இந்த வீரப்பன், ராஜ்குமார கடத்திட்டு போனப்பவும், பிரச்சன பண்ணுனாங்க. மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு காவேரி பிரச்சனை. இதை எல்லாம் தூண்டி விடரதுக்குன்னு சில ஆளுங்க இருக்காங்க. ஒருத்தர் வாட்டாள் நாகராஜு. தலையில தொப்பிய போட்டுட்டு சினிமா வில்லன் மாதிரி இருப்பார். அவர் போட்டோவ சின்ன பசங்ககிட்ட காமிச்சாலே, கொழந்தைங்க பயத்துல மூச்சா போயிடும். அதே மாதிரி நாராயண கௌடான்னு ஒரு அதிசயப்பிறவி இருக்கு.


இங்கே எருமைமேல ஜாலியா வர்றார் பாருங்க, அவருதான் வாட்டாள்

 இந்த மாதிரி ஏதாவது தமிழ் நாட்டுக்கு எதிரான பிரச்சன வந்துட்டாலே, இந்த தெருப்பொறுக்கிங்களுக்கு கொண்டாட்டம்தான். கையுல ஒரு கொடியப்புடிசுட்டு, சரக்கப்போட்டுட்டு கெளம்பிருவாங்க.

இவங்க முக்கியமான நோக்கம், எங்கே வேலை நல்லா நடக்குதோ, அத கெடுக்கணும். முக்கியமா, இந்த I.T அலுவலகம் இருக்கற பகுதிகள்ல கூட்டம் கூட்டமா போயி கல்ல விட்டு ஏறியுவாங்க. அவங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு குடுக்கும்.

இந்த I.T அலுவலகங்கல குறி வைக்கறதுக்கு காரணம், அங்கே நிறையப்பேரு வெளி மாநிலத்து ஆளுங்க (முக்கியமா தமிழ் காரங்க) வேலை செய்யறதுதான். இப்படி ஏதாவது பிரச்சன வந்தாலே, எல்லா வாகனங்களிலுமே, ராஜ்குமார் போட்டோவ ஓட்டிட்டு ஓட்டுவாங்க. அப்படி வண்டியில ராஜ்குமார் போட்டோ இருந்தா, கர்நாடகா ஆளுங்கன்னு அவங்கள ஒன்னும் செய்ய மாட்டாங்க. அந்த அளவுக்கு மேதாவிங்க, அறிவாளிங்க.

இதெல்லாம் விட, இன்னொரு கொடுமை என்னன்னா, இன்போசிஸ் நாராயமூர்த்தி ஐயாகிட்ட, கர்நாடகா மாணவர்களைத்தான் அவங்க அலுவலகத்துல வேலையக்கு எடுக்கனும்னு அவர மிரட்டுனவங்க.

இப்போ மறுபடியம், காவேரி தண்ணி பிரச்சன தல தூக்குது. இந்த அதிபுத்திசாலிங்க வேலைய ஆரம்பிச்சுடுவாங்க.

இந்த மின்சாரம் எப்படி சென்ட்ரல் கிரிட் அப்படின்னு ஒரு மத்திய தொகுப்புல இருந்து எல்லா மாநிலத்துக்கும் கிடைக்குதோ அந்த மாதிரி, இந்த நதி நீர் விஷயமும் மத்திய தொகுப்பு கட்டுப்பாட்டுல இருந்திருந்தா, இந்த பிரச்சினையே வந்திருக்காது.

அதுசரி... நம்ம ஊருக்குத்தான், மின்சாரமும் சரி, தண்ணீரும் சரி, ரெண்டுமே வருவது இல்லியே. அப்புறம் எது எங்கே இருந்தா என்ன?
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. //
  அதுசரி... நம்ம ஊருக்குத்தான், மின்சாரமும் சரி, தண்ணீரும் சரி, ரெண்டுமே வருவது இல்லியே. அப்புறம் எது எங்கே இருந்தா என்ன?
  //
  Ha..Ha.. nice one :).

  ReplyDelete
 2. உண்மை தான் சகோ எப்போ என்ன கிடைக்கும் அத வச்சி கோடி போராட்டம் சே என்ன

  ReplyDelete
 3. @பெப்பல், மோகன் P - தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. மின்சாரம், நதிநீர் பற்றி உள்ளதைதை உள்ளபடி சொல்லி இருக்கேன்.எல்லாமே இந்த சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளோட கபட நாடகம். நம்ம மக்கள் இதை எல்லாம் புரிஞ்சு அவங்க வேலைய அவங்க செய்ய ஆரம்பிச்சுட்ட, நாடு உருப்பட்டுவிடுமே. கொடி கட்டறது, கட் அவுட் வைக்கறதுன்னு, என்ன ஒரு கேவலமான கலாச்சாரம்.வளர்ந்த நாடுகள பாத்து கூட திருந்த மாட்டிங்கராகளே அப்படிங்கறதுதான் வேதனையான விஷயம்.

  ReplyDelete
 4. இதுவெல்லாம் ரொம்ப கொடுமைங்க...

  முடிவில் கேட்டீங்களே ஒரு கேள்வி...

  ReplyDelete
 5. என்ன பண்ணறது தனபாலன் சார். சில நேரங்கள்ல உண்மை சுடும்!!!

  ReplyDelete