ஒரு காலத்தில் (இரண்டாம் உலகப்போர் சமயத்தில்), மெட்ராஸ் ரெஜிமென்ட் என்றால் துப்பறிவதில் உலகத்திலே இரண்டாவது மிக சிறந்த காவல்துறை (முதலாவது, ஸ்காட்லான்ட் யார்ட்) என்று பெயர் பெற்ற, நமது தமிழக காவல் துறை இப்போது, முதலிடத்தில் இருக்கிறது. ஆம், தொப்பை வளர்ப்பதிலும், மாமூல் வாங்குவதிலும், குற்றவாளிகளை தப்பிக்க விடுவதிலும். சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது இது மறுபடியும் நிரூபிக்கபட்டிருக்கிறது.
பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடுகள். இது வெளிச்சத்துக்கு வந்து கிட்டத்தட்ட 30 நாட்கள் முடிந்துவிட்டன. இந்த முறைகேட்டுக்கு காரணமான குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இதேபோல, சுசி ஈமு கோழி நிறுவனத்தின் குரு வின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. விரைவில் கைது செய்வோம் என்று வாய்சவடால் விட்டுகொண்டுள்ளனர். ஆனால், அவரோ வக்கீல் மூலமாக பல முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துகொண்டுள்ளார். இந்நேரம், ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ, சுதந்திரமாக டான்ஸ் ஷோ பார்த்துகொண்டு இருக்க கூடும்.
உண்மையிலேயே நமது காவல்துறை இத்தகைய குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லையா? அல்லது, பிடிக்க முடியாதது போல ஒரு மாயை உருவாக்கபட்டுள்ளதா?
கடந்த பல வருட அரசியலை உற்றுப்பார்த்தால் தெரிய வருவது, ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெறும் சில முக்கிய வேளைகளில் ஒன்று, உயர் காவல் அதிகாரிகளின் மாற்றம். ஆளும்கட்சிக்கு விசுவாசமான அதிகாரிகள் முக்கிய பதவியில் அமர்த்தபடுவது. அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களை தூக்கிவிட்டு, புதிய ஆளும்கட்சியின் விசுவாசிகளை முக்கிய பொறுப்புகளில் நியமிப்பது.
ஆக, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவல் துறையில் மூன்று பிரிவுகள் இருக்கும். ஆளும் கட்சி விசுவாசி கூட்டம், எதிர்க்கட்சி விசுவாசி கூட்டம் மற்றும் தாங்கள் போட்டுக்கொண்டுள்ள காக்கி சட்டைக்கு விசுவாசியான கூட்டம். இதில் மூன்றாவது பிரிவினரை இப்போது பார்ப்பது மிகவும் அரிது.
கிரானைட், ஈமு கோழி போன்ற மோசடி பேர்வழிகளுக்கு, காவல் துறையின் ரகசிய நடவடிக்கைகள் அவர்களது விசுவாசிகள் மூலமாக தெரிந்து கொண்டு, திறமையாக தப்பிக்க முடிகிறது என்றுதான் நினைக்கிறேன்.
யாருக்கு தெரியும், இந்த குற்றவாளிகள் அவர்களுடைய முகநூலில், மணிக்கொரு முறை தங்களது இருப்பிட நிலவரத்தை புதுப்பித்துக்கொண்டு இருப்பார்களோ என்னவோ?
நல்லதொரு அலசல்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். உங்கள் வலைத்தளம் சென்றேன். ஜோக் எல்லாமே அருமை. அதிலும், குடிச்சிட்டு போற சூப்பர்!!!
ReplyDeleteபல தகவல்களை நன்றாக அலசி உள்ளீர்கள்... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
ReplyDelete