Monday, August 6, 2012

நாட்டுக்கு தேவை இன்னும் பல அதிரடி சகாயம் I.A.S.-கள்

மீண்டும் ஒருமுறை நாளிதள்கள் மற்றும் இணையங்களின் முதல் பக்கத்தில் சகாயம் I .A .S.

நேர்மைக்கு பெயர் போனவர், எந்த ஒரு அரசியல்வாதிகளின் தாந்தோன்றிதனதிற்கு அடிபணியாதவர், எந்த ஒரு நிலைமையிலும் கடமையை செய்ய தயங்காதவர், என்று அடுக்கிகொண்டே போகலாம்.
''புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.



அவரது 20 + ஆண்டு கால பணிக் காலத்தில் அவரது அதிரடி செயல்பாடுகள் பொதுமக்கள் அனைவரையும் அவரது பரம விசிறியாக மாற்றிவிட்டது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்கள் பல.

கல்லூரி ஆசிரியர் பெருமாள்முருகன் அவரது நாமக்கல் அதிரடி பற்றி எழுதிள்ள பதிவுகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டி இங்கே:

சகாயம் செய்த சகாயம்-1
சகாயம் செய்த சகாயம்-2
சகாயம் செய்த சகாயம்-3
சகாயம் செய்த சகாயம்-4
சகாயம் செய்த சகாயம்-5

இந்த பதிவுகளை எழுதி, திரு. சகாயம் அவர்களை பற்றிய பல தகவல்களை கொடுத்ததிற்கு திரு. பெருமாள்முருகன் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. இந்த கட்டுரைகளையே ஒரு நூலக தொகுத்து வெளியிட்டுள்ளனர் நண்பர்கள் சிலர். அவர்களுக்கும் நன்றி.

மதுரை ஆட்சித்தலைவராக இருந்தபோது, தேர்தல் நேரம். அவரது அதிரடியால், தி.மு.. மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் பணபட்டுவாடா செய்ய முடியாமல் தடுத்தார். அழகிரி மதுரை மாவட்டத்திலேயே மண்ணை கவ்விய வரலாற்றை எழுதியவர். அவர் தற்போதைய .தி.மு.. ஆட்சியாளர்களால் அதிரடி மாற்றம் செய்யப்பட்டபோது மதுரை மக்கள் அத்தனை பெரும் அதற்க்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், எந்த ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியை நல்ல பொறுப்பில் செயல்பட விட்டிருக்கிறார்கள்?

தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இவர், நெசவாளர்களை அவர்களது வீடு தேடி சென்று குறைகளை கேட்டு வருகிறார். அவரது நிர்வாகத்தில், கோ-ஆப்டெக்ஸ் ஒரு சிறந்த நிறுவனமாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த சில நாட்களாக, அவர் செய்தில் அடிபட காரணம், அவர் மதுரை ஆட்சித்தலைவராக இருந்தபோது அவர் விசாரணை நடத்தி சமர்பித்த "கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு" விசாரணை அறிக்கை.
ஒரு சில தனியார் கிரானைட் குத்தகைக்காரர்கள் அனுமதித்த அளவுக்கு மீறி கற்களை அரசுக்கு தெரியாமல் வெட்டி கடத்தி உள்ளார்கள். இதற்க்கு கனிம வள அதிகாரிகளும் உடந்தை.

இதை விசாரணை செய்து அறிக்கை சமர்பித்துள்ளார் பல மாதங்களுக்கு முன்பு. என்ன ஆயிற்று? நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசு, வழக்கம் போல கொடநாட்டிலும், போயஸ் கார்டனிலும் தூங்கி கொண்டிருந்தது. இந்த அறிக்கை ஒரு சில நாளிதழ்களில் வெளியான பின்புதான், அரசாங்கம் துயில் எழுந்து தற்போதைய மாவட்ட அதிகாரி மூலமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

மதுக்கடைகளை மூடலாமா என்று ஜெ. யோசிப்பதாக செய்தி வந்தது. அதைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதினேன். அப்போது வந்த செய்தியில், முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளை மதுக்கடைக்கு பதிலாக அதே போல வருமானம் தரும் திட்டங்களை கேட்டிருந்ததாக ஒரு செய்தி இருந்தது.

சகாயம் அவர்கள் சொல்வது போல, கிரானைட் கற்கள், மணல் குவாரிகள் மற்றும் பல இயற்கை வளங்களை அரசே நேரடியாக விற்பனை செய்தால், கடத்தல்கள தடுப்பது மட்டுமல்ல, பல ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கும். மக்கள் நல திட்டங்களுக்கு சாராயக்கடையை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சகாயம் போல இன்னும் பலர் நாட்டுக்கு தேவை. அவர்களை நல்ல ஒரு சக்திவாய்ந்த பதவியில் அமர்த்தகூடிய "தில்"லான அரசாங்கமும் தேவை.

வழக்கம் போல, நாமும் நம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டு, இன்னும் பல யுகங்கள் காத்திருக்க வேண்டியதுதான்!!!.
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. //வழக்கம் போல, நாமும் நம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டு, இன்னும் பல யுகங்கள் காத்திருக்க வேண்டியதுதான்!!!.//

    வழக்கமாச் செய்யற வேலைல என்னங்க கஷ்டம், சுலபமாச் செஞ்சுடமாட்டோம்?

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. ஆம், நீங்கள் சொல்வது சரி. இதைத்தானே, பல வருடங்களாக செய்துகொண்டுள்ளோம். மிக சுலபமான வேலைதானே நமக்கு.

    ReplyDelete