Tuesday, August 14, 2012

வல்லரசுனா என்ன? நாம எப்போ வல்லரசு ஆவோம்?

இன்னிக்கு சாயந்திரமா, அப்படியே காத்தாட வாய்க்கா வரப்புல நடந்து போயிட்டிருந்தேன். அப்போ, நம்ம ராமசாமி அண்ணன் ஆடு, மாடு ஓட்டிட்டு வந்துட்டு இருந்தாரு. என்ன தம்பி, காத்தாட வந்துட்டு இருக்கே... அப்படின்னார்.

அது ஒன்னும் இல்லன்னே.. நாளைக்கு நம்ம நாட்டோட 65வது சுதந்திர தின நாள். நாளைக்கு லீவு, அதனால அப்படியே ஊர் பக்கம் வந்தேன் அப்படின்னேன்.

சரி... ஒரு விஷயம், ரொம்ப நாளா யாரையாவது கேக்கனும்னுட்டு இருந்தேன்... நீ வந்துட்டே... ரொம்ப நல்லதாப்போச்சு. உன்கிட்டயே கேட்டுரவேண்டியதுதான்-னார்

கேளுங்கண்ணே. எனக்கு தெரிஞ்சத சொல்லறேன்னேன்.

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் அப்புறம் இந்த விஞ்ஞானிங்க எல்லாம்  சொல்லறது, நம்ம நாடு கூடிய சீக்கிரம் வல்லரசு ஆயிடும்னு. வல்லரசுனா என்ன தம்பி? நாம எப்போ வல்லரசு ஆவோம்?

நல்ல கேள்வி. சொல்றேன் கேட்டுக்கோங்க.

வல்லரசு ஆறது அவ்வளவு ஈசி இல்லண்ணே.  அதுக்கு, நம்ம நாடு நெறைய விஷயத்துல முன்னேறனும். முக்கியமா, நிலையான அரசியல் அமைப்பு, வலுவான இராணுவம், ஆரோக்கியமான பொருளாதாரம், சிறந்த உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் எல்லாம் இருந்தாதான் ஒரு நாடு வல்லரசு ஆகமுடியும்.

இப்போ, இதுபத்தி ஒவ்வொன்ன பாக்கலாம்:

நிலையான அரசியல் அமைப்பு: ஒரு நாட்டுல இருக்கற அரசாங்கம், ஆட்சிக்கு வந்த உடனே, எப்போ கவிழுமோ அப்படடின்னு இருக்ககூடாது. 5 வருஷ ஆட்சின்னா, அந்த அஞ்சு வருஷமும் எந்த பிரச்சனையும் இல்லாம நிலையான ஆட்சிய குடுக்கணும்.

வலுவான இராணுவம்: பக்கத்து நாட்டுக்காரன் யாரும், நம்மகிட்ட சண்டைக்கு வர பயப்படனும். அப்படியே நம்ம கூட சண்டைக்கு வந்தா, அவன எதிர்த்து போறாரடி ஜெயிக்கற அளவுக்கு நம்ம கிட்ட ராணுவ பலம் வேணும். சிறந்த விமான படை, கப்பல் படை, பீரங்கி எல்லாம் வச்சிருக்கணும். இங்கே இருந்து அமெரிக்கா வரைக்கும் போயி குண்டு போடற மாதிரு ஏவுகணை எல்லாம் இருக்கணும்.

ஆரோக்கியமான பொருளாதாரம்: இந்த பொருளாதாரத்துக்கு அடிப்படைய இருக்கறது, Gross Domestic Product (GDP) என்று சொல்லக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி. ஒரு நாட்டோட பொருளாதாரத்தின் வலிமையை அளவிடரதுக்கு பயன்படுத்தற ஒரு அளவுகோல்தான் இந்த GDP.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள, ஒரு நாட்டுல உற்பத்தி செய்யபடற மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளோட சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி அப்படின்னு சொல்லப்படுது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).

சுருக்கமா சொன்னா, மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)




சிறந்த உள்நாட்டு பாதுகாப்பு: இதுக்கு பெருசா விளக்கம் உண்ணும் தேவை இல்லை. நம்ம நாட்டுல குற்றம் எதுவும் பெருசா நடக்காம பாத்துக்கணும். அப்புறம், மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கணும். முக்கியமா பக்கத்து நாட்டுக்காரன் நம்ம ஊருக்கு டூர் வர்ற மாதிரி வந்து, ரயில்வே ஸ்டேஷன்லையும், ஹோட்டல்லயும் போயி கண்ணுல படரவங்கலேல்லாம் சுடக்கூடாது.

மேம்பட்ட தொழில்நுட்பம்: எல்லா துறையிலயும், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்த உபயோகபடுத்தி மக்களுக்கு பயன் படுறமாதிரி கருவிகள் தயாரிக்கணும். விவசாயத்துல இருந்து, ராக்கெட் வரைக்கும் எல்லாவிதமான லேட்டஸ்ட் தொழில்நுட்பமும் இருக்கணும்.

மேலே சொன்ன எல்லா விஷயத்திலையும் நாம முன்னேற்றம் அடஞ்சாத்தான், வல்லரசு அப்படிங்கற அந்தஸ்துக்கு உயரமுடியும். நான் சொன்னது முக்கியமான சில விஷயம்தான். இது மாதிரி இன்னும் நெறைய இருக்கு.


இப்போ, அமரிக்காவ பாருங்க. எந்த நாடு எங்கே என்ன சண்ட போட்டாலும், இவருதான் நாட்டமை பண்ணுவாரு. இவரு சொல்லறதுதான் தீர்ப்பு. எல்லா நாடும் இவரு பேச்சாத்தான் கேக்கனும்னு எழுதாத சட்டம் போட்டு வச்சிருக்காரு. என்ன காரணம்? மேலே சொன்னதுல முக்கவாசில அந்த நாடு முன்னேறி இருக்கு.

நல்லா புரிஞ்சிடுச்சு தம்பி. இத்தனை நாளா நம்ம அரசியல்வாதிங்க சொன்னத கேட்டு நானும், நம்ம நாடு சீக்கிரம் வல்லசரசு ஆயிடும்னு மனக்கோட்டை கட்டிட்டு இருந்தேன். நீ சொன்ன பல விஷயத்துல நாம இன்னும் அதல பாதாளத்துல இருக்கோம். ஒண்ணொண்ணா மேல ஏறி வர்றதுக்குள்ள, சுத்தி இருக்கற மத்த எல்லா நாடுகளும் வல்லரசாயிடும்னு நினைக்கறேன்.

நீங்க சொல்லரதுலயிம் உண்மை இருக்கத்தான் செய்யுது அண்ணே. நம்ம நாட்டுல இருக்கற இயற்கை வளங்களுக்கும் மக்களோட அறிவுக்கும், நல்ல தலைவர்களும் ஊழல் இல்லாத ஆட்சியையும் கடமை தவறாத அதிகாரிங்களும் இருந்திருந்தா, நாம இந்நேரம் வல்லரசு ஆயிருப்போம்.

300 வருஷமா ஆங்கிலேயன் கொடுங்கோல் ஆட்சி பண்ணி நம்மிடம் இருந்து சுரண்டியதை, இப்போ ஜனநாயக ஆட்சின்னு சொல்லிட்டு இந்த 65 வருஷம்மா சுரண்டிட்டு இருக்காங்க.

இருக்கற நல்ல அறிவாளிங்க எல்லாம் வெளிநாடு போயி அவங்களுக்கு வேலை பாக்கறாங்க. நம்ம நாட்டுல நல்ல வேலை வாய்ப்பு இருந்து, ஊழல், லஞ்ச லாவண்யம் எல்லாம் இல்லாம, நல்ல தரமான வாழ்க்கை முறை இருந்தா, அவங்க ஏன் வெளிநாடு போகணும்?


ஆனா, இங்கே என்ன நடக்குது? சட்டசபை, பார்லிமெண்டுல போயி உக்காந்து பலான படம் பாக்கறாங்க இல்லன்னா, கொறட்ட போட்டு தூங்கறாங்க. அப்படியும் இல்லையா, கோஷம் போட்டுட்டு வெளியே வந்துடறாங்க. மொத்ததுல, நம்ம வரிப்பணம் கோடி கோடியா வீணாயிட்டு இருக்கு.

நாட்டுல கடுமையான சட்டம் கொண்டு வரணும். அரசாங்க அதிகாரிங்க, அப்புறம் இந்த அரசியல்வாதிங்க எல்லாம் தப்பு பண்ணினா உடனே விசாரிச்சு தண்டனை குடுத்தாத்தான், நாடு முன்னேறும். நம்ம பேரன் பேத்தி காலத்துலயாவது நாடு முன்னேறி வல்லரசாகனும்னு சொல்லிட்டு, ராமசாமி அண்ணன் ஆடு, மாட்ட ஓட்டிட்டு போயிட்டாரு. அவரு சொல்லறதும் சரிதானே!
தொடர்புடைய பதிவுகள் :


14 comments:

  1. நல்ல அலசல்... பாராட்டுக்கள்...

    வல்லரசு வேண்டாம்... இப்போதைக்கு நல்லரசு ஆனால் போதும்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார். உங்களைபோன்ற சிலரின் ஊக்கத்தினால்தான் எழுத முடிகிறது.

      Delete
  2. நல்ல பகிர்வு.

    இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி மாதேவி. முதல் முறை வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அடிக்கடி வரவும். நன்றி.

    ReplyDelete
  4. Hello sir,
    I am manoj new commenter.Absolutely true but our nation and cental government also try to best control inflation rate,corruption,black money etc..........MJM

    ReplyDelete
  5. மனோஜ், உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    நம் அரசு சில தவறான கோள்களின் மூலமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயன்று வருகிறது. அதனால் தான் சில சமயங்களில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தபோதும் கூட, பணவீக்கம் முந்தய வாரத்தை விட குறைவாக இருக்கும்.

    ஒரு நாளைக்கு 28 ரூபாய் சம்பாரித்தால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்துவிடுகிறார்கள் என்ற கொள்கையை கொண்டுள்ள அரசாங்கம் இது.

    கருப்பு பணம் என்பது ஒரு மிகப்பெரிய பூதம். அதை வெளிக்கொணர்வது அவ்வளவு எளிதல்ல. நிறையபேர் இதைப்பற்றி பதிவுகள் எழுதி வருகிறார்கள்.

    ReplyDelete
  6. நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே. ஒரு சிறு வேலையாக ஊருக்கு சென்றிருந்ததால், உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.

      Delete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  8. வல்லரசு கனவு நன்வாகட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

      Delete
  9. வலைச்சரம் மூலம் முதல்வருகை! அருமையான கருத்துக்கள்! அழகான அலசல்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி சுரேஷ். உங்கள் தளத்திற்கு சென்று பார்க்கிறேன்.

      Delete