Wednesday, August 1, 2012

பசி, பஞ்சம், பட்டினி - அடுத்த 30 வருடங்களில் இந்தியாவில் உணவுக்கு பதில் மாத்திரைதான்

இது நடக்கப்போவதில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நம் இந்திய அரசு விவசாயத்தை ஒரு பொருட்டாக மதித்து, விவசாயிகளுக்கு போதிய சலுகைகளும், அவர்கள் விளைவித்ததற்கு தகுந்த விலையும் கிடைக்க வழி செய்து கொடுக்காவிட்டால், அடுத்த 30 வருடங்களில் இந்தியாவில் உணவுக்கு பதில் மாத்திரைதான். இது நிச்சயம் நடக்கும்.

கணிப்பொறி முன் அமர்ந்து தொழில்நுட்ப வேலை பார்ப்பவர்களுக்கும், வாழ்வாதாரத்தை தேடி கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி சென்றவர்களுக்கும் இன்றைய விவசாயத்தின் நிலைமையும், விவசாயிகளின் நிலையும் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

                                                                                நெல்வயலில் நாற்று நடவு

மாதம் மும்மாரி பொழிந்து, முப்போகமும் விளைந்து, யானை கட்டி போரடித்த நம் தமிழகத்திலே, இன்று ஒரு போகம் நெல் விளைவிக்கவே வழி இல்லாமல் போய்கொண்டு இருக்கிறது. அந்த நெல்லும், ஏனைய விளைபொருட்களும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளால், விஷம் ஆகிவிட்டது.

வல்லரசு கனவில் மிதந்து கொண்டு, குளிர் சாதன அறையில் நாற்காலியை தேய்த்து கொண்டு, எந்த திட்டத்தில் எத்தனை கோடி சுருட்டலாம் என்ற யோசனையில் இருக்கும் நமது மந்திரிகளுக்கு விவசாயிகளின் இன்றைய நிலை ஒரு பொருட்டாகவே தெரிவது இல்லை.

ஏகாபத்திய முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமை வேலை செய்து நம் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி கொண்டு இருக்கும் இவர்களுக்கு, சோத்துக்கு பதில் காசு பணத்தை திங்க முடியாது என்ற உண்மை உரைக்கும்போது, எல்லாமே கைவிட்டு போய்விடும்.

இதற்கான காரணங்கள் என்ன? இதை தடுக்க என்ன வழி?

1. மரங்கள் வளர்ப்பதன் மகத்துவத்தை நம் மக்களுக்கு புரியவைக்க வேண்டும். மரக்கன்றுகள் நட்டுவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் அதை வளர்பதிலும் முக்கியத்துவம் காட்டவேண்டும்
2. ஆக்கிரமிப்பில் உள்ள எரி, குளம், குட்டைகளை தூர்வாரி மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
3. புதிதாக ஏறி, குளம் அமைக்க வேண்டும்
4. காடுகளை அழிக்க தடை விதிக்க வேண்டும்
5. விவசாயிகளின் விளை பொருட்கள், இடைதரகர் இன்றி நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகை செய்ய வேண்டும்
6. விவசாயத்தில் வெளிநாடுகள் போல, தொழில்நுட்பத்தை உபயோகிக்க தொடங்க வேண்டும்
7. முக்கியமாக ரசாயன உரம், பூசிகொல்லி மருந்துகளை தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்

இதெல்லாம் சாத்தியமா? நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனது வைத்தல் மட்டுமே இது நடக்கும்.


                                                         இயற்ககை விவசாயி நம்மாழ்வார் ஐயா

தற்போது, இயற்ககை விவசாயி நம்மாழ்வார் ஐயா, ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேகர் போன்ற ஒரு சில நல்லோரின் முயற்ச்சியால் இயற்கை விவசாயம் தமிழகத்தில் துளிர் விட்டிருக்கிறது ஒரு மகிழ்ச்சியான செய்தி. அது தவிர, பசுமை விகடன் விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

உழவன், சேத்திலே கால் வைக்காவிட்டால், நாம் சோத்திலே கை வைக்க முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.

நிலைமை கைமீறி போவதற்குள், அரசும் அரசாங்கமும் விழிக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

  1. சிறப்பான கருத்துக்கள்... பாராட்டுக்கள்...
    தொடர வாழ்த்துக்கள்...


    நன்றி...
    (த.ம. 1)

    ReplyDelete
  2. அருமையாக எழுதியுள்ளீர், உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த நோக்கில் சிந்திப்பது, நல்ல மாற்றத்தைத் தரும்.
    வருமுன் காப்பார்கள் என நம்புவோம்.

    ReplyDelete
  3. வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. திண்டுக்கல் தனபாலன் & யோகன் பாரிஸ்

    ReplyDelete
  4. விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 1
    http://suraavali.blogspot.in/2012/01/2.html
    http://suraavali.blogspot.in/2012/01/2_13.html

    ReplyDelete