Wednesday, September 12, 2012

அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துமா ஐபோன்-5?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விஷயமான ஐபோன்-5 இன்று வெளியிடப்படுகிறது. இது, இந்த வருடத்தின் அமெரிக்காவின் நான்காம் காலாண்டு பொருளாதரத்தை 0.5% சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்புப்படி, ஒரு ஐபோனில், 400 அமெரிக்க டாலர் அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (அதாவது, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பாகங்கள்) இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் மட்டும், அமெரிக்காவில் ஒரு கோடி ஐபோன் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ, அமெரிக்கர்களின் சுருக்கு பையில் இருக்கும் 600 டாலருக்கு வேட்டு நிச்சயம்.

அப்பாடா.... இந்த ஐபோன் செய்திய வச்சு, ஒரு குட்டி பதிவ தேத்தியாச்சு.
தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

  1. தேவையோ, தேவையில்லையோ... வாங்குவதற்கு தான் ஆட்கள் நிறைய இருக்காங்களே... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete