Tuesday, July 31, 2012

ஜெயலலிதா: தமிழகத்தை தலை நிமிர வைக்கும் புதிய சக்தியா???

ஜெயலலிதா: தமிழகத்தை தலை நிமிர வைக்கும் புதிய சக்தியா???



இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் நான் ஒரு .தி.மு. அனுதாபியோ அல்லது அம்மையார் ஜெயலலிதாவின் துதி பாடியோ இல்லை. நம் நாடு முன்னேறி ஒரு வல்லரசு (அண்ணன் விஜயகாந்த் படம் இல்லிங்க) ஆகப்போவது எப்போது என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கும் பல கோடி இந்தியர்களில் நானும் ஒருவன். கடந்த சில மாதங்களாக சிங்கையில் இருப்பதால், சிங்கப்பூர் பற்றி சிறிது அறிந்து, இங்கே சிங்கையில் உள்ள அரசியல், அரசியல்வாதிகள், அவர்களது மக்கள் நல திட்டங்கள் பற்றி ஆச்சர்யபட்டு, இப்படி நம் நாடு இல்லையே என்று ஆதங்கப்படும் ஒரு சராசரி இந்திய தமிழன்.

விவசாயத்தை பற்றி எழுதலாம் என்று எண்ணியிருந்த எனக்கு, இன்றைய முக்கிய செய்தியாக, "ஜெ.. டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?-மது விலக்கு அமலாகிறது??" என்ற செய்தி, இந்த பதிவை எழுத தூண்டியது.

என்னை பொறுத்தவரை, இது மிகவும் முக்கிய செய்தி மட்டும் அல்ல. தமிழக மற்றும் இந்திய அரசியல் மற்றும் (குடி)மக்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அப்படி என்ன திருப்புமுனை என்று கேட்க தோன்றுகிறதா?
     
1. ஜெயலலிதா மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு
2. “கிங் மேக்கர்” என்று சொல்ல கூடிய, பிரதமரையே தேர்ந்து எடுக்கும் சக்தியாக உருவெடுக்கலாம்
3. தமிழக தாய்மார்களின் ஏகோபித்த பேராதரவு பெற வாய்ப்பு, அது அவரை "இருக்கும்" வரை முதல்வராக இருக்க அடித்தளம் அமைக்கலாம்
4. தமிழக மக்களின் வாழ்வுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையலாம்
5. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல தீய செயல்கள் குறைய வாய்ப்பு
6. உழைப்பாளர்கள் பணம் ஒழுங்காக வீட்டிற்கு செல்ல ஒரு முயற்சி
7. ஏழ்மை, வறுமை குறைய ஒரு சந்தர்ப்பம் அமையலாம்
8. விவசாயத்தில் மறுமலர்ச்சி உருவாக்கலாம்

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனா, இடம் பத்தாது.

மொத்தத்தில், தமிழ் நாடு, குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஒரு நல்ல பாதையை நோக்கி போகும் என்பது என் எண்ணம்.

குஜராத் பற்றி பேசுவதால், நான் பா.ஜ.க விசுவாசி இல்லை. நரேந்திர மோடி அவர்கள் செய்த ஒரு தவறால், அவருக்கு இன்றும் அமெரிக்க விசா மறுக்கப்பட்டு வருவது எவ்வளவு பெரிய அவமானம் என்று அறிந்தவன்.

என்னுடைய நோக்கம், நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் யாரவது எப்போதாவது ஒரு சில நல்ல முடிவுகள் எடுக்கும்போது, அதைப்பற்றி எழுதி எனக்கு நானே சந்தோஷப்பட்டு கொள்வது.

ஜெயலலிதா அவர்கள் மிகச்சிறந்த நிர்வாகி என்பது எல்லாரும் அறிந்ததே. அறிவாளி முட்டாள் ஆவதற்கு ஒரு காரணம் போதும். அது "ஆணவம்". அதை தெரிந்து கொண்டு, அம்மையார் இது போன்ற முடிவுகள் எடுத்தால், நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

இந்த முடிவை, ஜெ. அவர்கள் அமல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன், இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: போன பதிவுல, செங்கோட்டையன் அவர்களை, அம்மா பதவியில் இருந்து தூக்கியதை கண்டித்து பதிவு எழுதியவன். இப்போ, அம்மாவை பத்தி பாராட்டுறதுக்கு காரணம், நல்லது செஞ்சா நடுநிலை மக்கள் கண்டிப்பா ஆதரிப்பாங்க. எனவே... அரசியல்வாதிகளே, கொஞ்சம் பொது நலனையும் பாருங்க.
தொடர்புடைய பதிவுகள் :


14 comments:

  1. நல்ல திட்டம்தான். அமலுக்கு வந்தால் உண்மையில் பெரும் சாதனை. திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமல்லாது, கள்ளச்சாராயம் தலைதூக்காமலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை ஐயா. கள்ளச்சாரயத்தை தலை தூக்க விடாமல் இருக்க கடுமையான பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல், அரசாங்கத்திற்கு பதிலாக, தனியார் கையில் போதை வியாபாரம் சென்று விடும்.

    ReplyDelete
  3. ரொம்பத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது.ஜெ வந்தா நல்லது செய்வாங்கன்னுதான் நெனச்சு கொண்டு வந்தீங்க.என்னாச்சு?ஒன்னா ரெண்டா எடுத்துச் சொல்ல.போலீஸ் ஆட்சிதான் நடக்கிறது.யாராவது அதப் பத்தி எழுதுனீங்களா?சென்னை முழுக்க ஈக்கள் தொல்லை.இதுக்கு முன்னாடி இப்படியா சென்னையில் ஈக்கள் வந்தன.இப்போது ஏன் வருகிறது?குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே கிடக்கிறது.அதனால்தான் ஈக்கள் படையெடுக்கின்றன.ஒவ்வொரு துறையும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.சென்னை கவுன்சிலர்களைக் கண்டித்த உங்க ஜெ ஏங்க எம்.எல்.ஏக்களயும்,மந்திரிமார்களையும் கண்டிக்கல?அவங்க தனக்குக் கல்லாக் கட்டுறாங்க அதனாலதானே? சரி,டாஸ்மாக் விவகாரத்துக்கு வருவோம்.டாஸ்மாக்க கொண்டு வந்தது யாரு?உங்க ஜெ தானே! டாஸ்மாக்க மூடினா என்னாகும்?கள்ள்ச் சாராயம் பெருக்கெடுத்து ஓடும்.போலீஸுக்கு மாமூல் குவியும்.போலீசுடன் அ.தி.மு.க.கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கும்.இப்போது அரசுக்கு வரும் வருவாய் அ.தி.மு.க.காரனுக்கும்,அவன் வழியாக ஜெ வுக்கும் போகும்.குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்.டாஸ்மாக்கை மூடினால் மட்டும் அப்படியே குடிக்காத நல்ல பிள்ளையாகிவிடமாட்டான்.கள்ளச் ராயத்தையும்,கள்ளையும்,போதை மருந்தையும் தேடுவான்.இப்போது ஜெ கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் சுத்த சுயம்பிரகாசங்களா?அவர்களின் மாமூல் கணக்கு உங்களுக்குத் தெரியுமா?உங்க யோசனை அ.தி.மு.க.கர்ரனுக்கும்,போலீசுக்கும் இலாபம் அளிக்கும் நல்ல(?)யோசனைதான்.உங்க ஜெ யை எப்படித்தான் நல்ல நிர்வாகின்னு சொல்றீங்களோ...மின்சாரம்,பால்,பஸ் என எல்லாத்தையும் உயர்த்திவிட்டு மக்களைத் திண்டாட விட்டு அரசை நட்டத்தில் இருந்து மீட்பதுதான் சிறந்த நிர்வாகிக்கு அழகா?நல்ல நிர்வாகி யார் தெரியுமா? பயணிகள் கட்டணத்தை ஏற்றாமல் ரயில்வே துறையை இலாபத்தில் இயக்கினாரே லாலு பிரசாத் அவர்தான் நல்ல நிர்வாகி.உங்க ஜெ அல்ல.தன்னால் முடியாது என்பதால் மக்களை வதைக்கும் கட்டண உயர்வும்,வரி உயர்வும் செய்வதற்குப் பெயர் நல்ல நிர்வாகம் அல்ல..தெரிஞ்சுக்குங்க.ஜெ.அறிவாளியும் அல்ல;நல்ல நிர்வாகியும் அல்ல;மனித நேயரும் அல்ல;ஜனநாயகவாதியும் அல்ல.இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு வலு சேர்க்க ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடியும்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா. உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நீங்க எடுத்து வச்ச ஒவ்வன்னுக்குமே, தனித்தனியா பதிவே போடலாம். நேரம் இல்லை.

    ஐயா.. நான் மொதல்லயே சொல்லிட்டேன்... நான் ஒரு அ.தி.மு.க அனுதாபியோ அல்லது அம்மையார் ஜெயலலிதாவின் துதி பாடியோ இல்லை.

    //பயணிகள் கட்டணத்தை ஏற்றாமல் ரயில்வே துறையை இலாபத்தில் இயக்கினாரே லாலு பிரசாத் அவர்தான் நல்ல நிர்வாகி//. இதுதான் உண்மைன்னு எல்லாரும் நம்பிகிட்டு இருக்காங்க. லல்லு பண்ணின ஒரே நல்லா விஷயம் இதுதான். ஒரு நல்லா ரயில்வே அதிகாரி ரொம்ப நாலா சொல்லி யாருமே காதுல போட்டுக்காத விஷயத்த, லல்லு என்னன்னே தெரியாம, ஒரு கையெழுத்த போட்டுட்டாரு. அப்புறம் நடந்ததுதான் வரலாறு, எல்லாருக்கும் தெரியுமே... அந்த நல்லா அதிகாரி பேரு மறந்துட்டேன்.. இல்லன்ன, அதையும் இங்கியே போட்டு இருப்பேன். இது, என்னோட நண்பன் அவைக்கு தெரிஞ்ச ரயில்வே ஆபீசர் மூலமா சொன்ன உண்மை. நம்புவது கஷ்டம் தான்.

    லல்லுவோட மாட்டு தீவன ஊழல் தான் எல்லாருக்குமே தெரியுமே. எதுவுமே தெரியாத அவரோட பொண்டாட்டிய கொஞ்ச நாலு முதலமைச்சர் நாற்காலில உக்கார வச்சாரு... ஹ்ம்ம்ம்... என்ன பண்ணறது.

    ReplyDelete
    Replies
    1. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விலை ஏற்றம் நிச்சயம். இல்லன்ன, ஆட்சி நடத்த முடியாது. அப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விட்டதே, இந்த ஜெ. அம்மையாரும், மு.க. ஐயாவும் தான். நான் மறுக்கல.

      மொதல்ல, இந்த இலவசத்த நிறுத்தனும். அது டி.வி யா இருந்தாலும் சரி, ஆடு, மாடு, மடிகனினியா இருந்தாலும் சரி. அந்த விஷயத்துல நான் ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பண்ணலைங்க.

      என்னோட ஆசை எல்லாம், இந்த டாஸ்மாக்க ஒழிச்சுட்டு, கள்ள சாராயத்தையும் சமாளிச்சு, ஒரு நல்லா ஆட்சி குடுக்கணும். அதுக்கு, இது ஒரு நல்ல முயற்சி.
      அது தவிர, நான் யாரையும் அம்மாவுக்கு ஓட்டு போடுங்கன்னு பிரச்சாரம் பன்னால.

      இதை பண்ணினா நாடு நல்ல இருக்கும்னு தான் சொல்லறேன்.

      Delete
  5. தமிழ்நாடு அரசின் மொத்த வருமானத்தில் 30 % டாஸ்மாக் மூலம் வருகிறது. இதனை ஒரேயடியாக தமிழ்நாடு அரசு கைவிடும் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.

    எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பு இதனை நம்ப இயலாது.

    ReplyDelete
    Replies
    1. வருகை & உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் மது விளக்கு அமல்படுத்தினால், அதைவிட ஒரு நல்ல செய்தி எதுவும் இருக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

      Delete
  6. Good Post..Simply explained the benefits of the proposed scheme. :)

    ReplyDelete
  7. //ஜெயலலிதா: தமிழகத்தை தலை நிமிர வைக்கும் புதிய சக்தியா???//


    இல்லவேயில்லை.
    காரணம்... அவரை ஆட்டிப் படைக்கும் மமதை. அதனால் அவர் எடுக்கும் எடுத்தேன், கவிழ்த்தேன் முடிவுகள். சுற்றிவர அடிமைகளையே துணைக்கு வைத்திருப்பதில் மகிழ்ச்சி காண்தல்.
    இவை ஒரு சிறந்த தலைவருக்கு அழகல்ல! அது யாராகவிருந்தாலும்.

    அடுத்து மது விலக்கு!
    இது மக்களுக்கும் பயனளிக்குதோ இல்லையோ!, கட்டாயம் கள்ளச்சாராயம் காச்சுவோருக்கும்(அரசியல் வாதிகள்), காவற்துறைக்குமே பயனளிக்கும்.
    அரசு ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையெனப் புலம்பும் போது, மிக முக்கிய நிதி வரத்துக்குத் தடை என்றால், எப்படித் தாங்கும் .இதை எப்படிச் சமாளிக்கப் போகிறது. அதற்கான திட்டமென்ன?
    அடுத்து இப்பழக்கத்துக்கு அடிமையானோர் நிலை. இவை உடனே நிறுத்தக் கூடிய பழக்கங்களா?
    முன்பு பொதுவாக ஒருவர் குடிக்கப் பழகுவது 40 வயதுக்குமேல் தான், ஆனால் இன்று 20 வயது பலர் பாடசாலை செல்லும் போதே இப்பழக்கத்துக்கு அடிமையாவது செய்திகளாக வருவதை நாம் பார்க்கிறோம்.
    அதுவும் இந்த கணனித் தொழில் வந்த பின் இளம் சமுதாயத்தின் மத்தியில் இந்த பழக்கம், பால், சாதி வேறுபாடின்றி மெல்லமெல்லப் பரவியது. தொடமாட்டார்கள், ஆச்சாரமானவர்கள் என்ற சாதியினர் கூட எந்தக் கூச்சமுமின்றி அருந்துகிறார்கள், அசைவம் சாபிடுவதுபோல் .இது மறைக்க முடியாத உண்மை.
    நகர் மயமாதலால் கிராமங்கள் கூட இந்த பழக்கத்தை நாகரீகமென எண்ணிச் செய்வது மிகப்பெரிய வேதனை.
    குடிக்காத இளம் சமுதாயத்தைக் கோமாளியாகக் கணிக்கும் சமுதாயம் ஒன்று உருவாகிவிட்டது. அவர்களுக்காக இரவு விடுதிகள் உருவாக்கப்பட்டுளன.மது கரை புரண்டு ஓடுகிறது. மாற்றத்துக்கு கோவா, பாண்டிச்சேரி என பறந்து பருகும் வாய்ப்பும் வசதியும்.

    குடிப்பது கேடில்லை என்பது போன்ற விவாதங்கள். எங்கெங்கே குடிக்கு நல்ல பக்க உணவுகள் கிடைக்குமென்பதைத் தவறாமல் எழுதும், தமிழகத்தைத் தாங்கும் எழுத்துவியாபாரிகள்
    குடிப்பதால் கெடுவது ஏழைகளும், கல்வி அறிவற்றோரும் எனும் மாயத் தோற்றம் உருவாக்கும் வெகுஜன சாதனங்கள் என தமிழகம், தலைகிறுகிறுத்துப் பலகாலமாகிவிட்டது.
    ஆண்களுக்கு நிகராக இன்று பெண்களும் மது விடுதிகளை நாடுவது சகசமாகிவிட்டது.விகிதாசாரத்தில் குறையலாம். இல்லையெனச் சொல்லமுடியுமா? முன்பு படிக்காத பட்டிக்காட்டுப் பெண்ணே மது அருந்துவாள், புகைபிடிப்பாள்...இன்று இவை படித்த பெண்களின் மேலதிக தகமையாகக் கணிக்கப்படுகிறது.
    இந்நிலையில் மது விலக்குக் கொண்டுவந்தால் இதை யார் சட்டைசெய்யப் போகிறார்கள்.
    அதனால் பினாமிகள் வைத்து மது வியாபாரம் செய்யப் போவது அரசியல் செல்வாக்குடையோரே!
    அதற்கு உறுதுணையாக இருக்கப்போவது, கையூட்டால் ஈரல் சிதைந்திருக்கும் காவற்துறையே!
    அண்டைமாநில மது இனி , தண்ணீர் வண்டியில் வரும்.
    அப்பப்போ செல்வாக்கற்ற ஏழைக் குடிகாரர்களிடன் 20,50 வாங்கிக் கொண்டு காவற்றுறை அவர்கள் குடிக்கக் காவல் இருக்கப் போவதே நடக்கப் போகிறது.

    ReplyDelete
  8. அடுத்து என்றுமே விதிவிலக்குகள் என்று இருக்கப்போகிறது, "உத்தரவு பெற்ற" குடிகாரர்கள் -தம் செல்வாக்கைப் கொண்டு அரச அனுமதியுடன் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்யப்போவதுடன் , தமக்கு வேண்டியோர் தேவையையும் பூர்த்தி செய்யப் போகிறார்கள்.

    இதனால் அல்லற்பட்டு , கள்ளச்சாராயத்தில் சிக்கிச் உயிரை விடப்போவது ஏழை அன்றாடம் காச்சி, கடும் உழைப்பால் உடல் நோத்தீர்க்க மதுவை நாடுபவரே!
    கடும் உடலுழைப்புக்கும், சில சிரமமான சகிக்கமுடியாத வேலைகளுக்கும் மதுவே, அவ்வேலை செய்வோரை செய்யவைக்கிறது. சாதாரண நிலையில் செய்யவே முடியாது.

    இன்னும் நாறும் பாதளச் சாக்கடையிலிறங்கித் துப்பரவு செய்வோரையும், தலையில் மலமள்ளும் ஒரு கூட்டமும்...மதுவின் துணையுடன் தான் அந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் சந்தோசத்துக்குக் குடிக்கவில்லை. அவர்கள் கஸ்டத்தைச் சகிக்கக் குடிக்கிறார்கள்.
    நாள் பூராகவும் குளிர்சாதனத்தில் இருந்து எடுபிடிக்கு 4 வேலையாளும் வைத்திருப்பவனும் குடிக்கிறான்.
    இந்த இரண்டு கூட்டத்தின் குடியின் தேவை வேறு வேறு!! அதை முதல் புரிந்து கொள்ளுங்கள்.
    ஆகவே மீண்டும் கொத்துக் கொத்தாக விசமது அருந்தி மரணம் எனும் செய்தி வரா வண்ணம்.எப்படி மது விலக்கு கொண்டுவருவது என்பதை சிந்தியுங்கள்.
    உங்கள் புண்ணியத்தால் இன்று இதைப் பழகிய இளம் சமுதாயத்துக்கும் வழிகாட்டுங்கள்.

    மீண்டும் ஒரு சில வருடங்களில், இந்த மது விற்பனையை அரசு தொடங்கத்தான் போகிறது, தொடங்குமாயின் , தயவு செய்து இப்படியே தொடரட்டும் விட்டு விடுங்கள்.

    ஆனால்,பள்ளிகள், மத சம்பந்தமான இடங்கள், பொதுமக்கள் கூடுமிடங்களில் உள்ள மது நிலையங்களை அகற்றுங்கள். வயது குறைந்தோருக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துங்கள். விற்பனைக் கூடங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்துங்கள். நேரக் கட்டுப்பாடு நிர்ணயியுங்கள். காவற்றுறை , கையூட்டுப் பெறும் துறையென்பதையும் மாற்றுங்கள்.

    உலகமே குடிக்கிறது. இந்தியா உலகமயமாகத் துடிக்கிறது. இதைத் தவிர்க்கமுடியாது. குடிப்பவர் அதன் கேட்டை உணரலாம். ஆனால் அவர் மீள்வது அவர் கையிலேயே உள்ளது. எத்தனை சட்டம் வந்தாலும்
    "திருடராய் பார்த்து திருந்தினால் தான் திருட்டு ஒழியும்"

    கள்ளு, சாராயத்துடன் ஒப்பிடும்போது தீங்கு மிக மிகக் குறைந்தது. கள்ளிறக்குவதை அனுமதிப்பதால் இயற்கை மது கிடைப்பதுடன், பனை தென்னை வளங்களும் வீரியமடையும். அத் தொழிலை அண்டிப் பிழைப்போர் சுபீட்சமடைவர்.

    எனக்கு , ஜெயலலிதா மேல் எந்த கோவமுமில்லை, மதுப் பழக்கம் மருந்துக்கும் இருந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. யோகன் பாரிஸ் அவர்களே. முதல்ல, என்னைய மதிச்சு வந்ததற்கு ஒரு நன்றி.

      அப்புறமா, இவ்வளவு பொறுமையா இவ்வளவு பெரிய பின்னூட்டத்துக்கு தலைவணங்குகிறேன்.

      உண்மை. அம்மாவுக்கு மமதை ஜாஸ்தி. அதனால்தான் ஆணவம், அறிவாளிகளை கூட முட்டலாக்கும்னு போட்டு இருந்தேன். மது விலக்கு கொண்டு வர்றதால, சில பாதங்கள் இருந்தாலும், கூட்டி கழிச்சு பார்த்திங்கன்ன, நன்மைதான் ஜாஸ்தி.

      நீங்களே சொல்லிட்டிங்க, பள்ளிக்கூடம் போற பசங்களே குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 20 வருஷம் முன்னாடி பள்ளிக்கூடம் போன எந்த பயலும் கள்ள சாராயம் குடிக்கல. இப்போ, சந்துக்கு சந்து, மூலைக்கு மூல சரக்கு கடை. காசு குடுத்தா, சரக்கு வீடு தேடி வருது. அதனால, 6 வது படிக்கற பையனே குடிக்கிறான். என்ன, பொண்ணுங்க, கொஞ்சம் நாள் கழிச்சு, ஆபீஸ் பார்ட்டில குடிக்க ஆரம்பிக்கறாங்க.

      உண்மைதான். இங்கே கடைய சாத்துனா, பெங்களூர், கேரளா, ஆந்தர, பாண்டிச்சேரி போவான். ஆனா, ஒவ்வொரு நாளும் போக முடியாது. மாசம் 10 தடவ குடிக்கறவன், 2 தடவ குடிப்பான். பரவா இல்லியே.

      அப்புறம், கள்ளசாராயம். இது பெரிய எமன் தான். ஆனா, அரசாங்கமும் அதிகாரிங்களும் நெனைச்சா கண்டிப்பா இதுக்கும் ஒரு வழி பண்ணலாம்.
      மது விலக்கு பண்ண நல்ல இருக்கும்னு தான் சொல்லறேன் சார். அத மட்டும் பண்ணி பாக்கட்டும், அப்புறம் பாருங்க. நெறைய மாற்றங்கள் வரும்.

      மதிச்சு வந்ததுக்கு, மறுபடியும் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி.

      Delete
  9. ஏன் நீங்கள் பா.ஜ.க அனிதாபியாக இருந்தால் என்ன தப்பு. ஏதே காங்கிரஸ் பற்றி எதாவது புகழ்ந்து சொல்லும் போது இப்படி முன் எச்சரிக்கையாக நான் காங்கிரஸ் அனுதாபி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. உங்களை போன்றவர்களை பார்க்கும் பொது திமுக காங்கிரஸ் காரர்கள் பிரித்து ஆளும் சூழழை மிக நன்றாகவே செய்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
    .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நான்றி ஹரி. நான் எந்த கட்சிக்காரனும் கிடையாது. இதற்க்கு முன்னாள் ஒரு பதிவில் ஜெ அவர்களின் ஒரு செயலை சாடி இருந்தேன். காங்கிரசை பற்றி பதிவு போட்டாலும், நான் காங்கிரஸ் அனுதாபி இல்லை என்று ஒரு disclaimer போடுவேன். இதில் எந்த ஒரு தப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

      இதில், பிரித்தாளும் சூழ்ச்சி எங்கே வந்தது என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா?

      Delete